காரைதீவு பிரதேசத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் இன்று (20) வெள்ளிக்கிழமை உணவு மாதிரிகளை சோதிக்க திடீர் பாய்ச்சல் நடாத்தப்பட்டது.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் இந்த திடீர் பரிசோதனையை மேற்கொண்டார்கள்.
சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜமீல் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டார்கள்.
சுமார் ஐந்து கடைகள் இன்று வெள்ளிக்கிழமை பரிசோதனை குழுவினரின் பாய்ச்சலுக்கு இலக்கானது.
உணவுப் பொருட்களின் மூன்று உணவு மாதிரிகள் பெறப்பட்டு ஒன்று சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment