தாய் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது யு.எஸ்.எப்.சிறீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் சாய்ந்தமருது அக்பர் மையவாடி வளாகத்தில் (04) சனிக்கிழமை இடம்பெற்றது.
யு.எஸ்.எப்.சிறீலங்கா அமைப்பின் ஸ்தாபகர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ஏ.கபூர் தலைமையில் இடம் பெற்றது.
இச்சிரமதான நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளையின் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான் உட்பட அமைப்பின் அங்கத்தவர் களும் கலந்து கொண்டனர்.


0 comments :
Post a Comment