எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தளை கண்காணிக்கும் முகமாக PAFFREL அமைப்பின் தேசிய இணைப்பாளர் திரு.சுஜீவ கயனத் மற்றும் திருகோணமலை எஹெட் கரிதாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டாக்டர் போல் ரொபின்சன் அடிகளாரிற்கும் இடையிலான சுமூக சந்திப்பொன்று நேற்று முன்தினம் (12.02.2023) மாலை 2.00 மணி அளவில் எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் காலங்களில் சுயாதீனமாக தேர்தலை கண்காணிக்கும் முகமாக மாவட்ட மட்டத்தில் புதிய தேர்தல் கண்காணிப்பு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொறுப்பு மற்றும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அதனை அறிக்கைப்படுத்தும் பொறுப்புகளும் இங்கே கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களை எவ்வாறு பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும் தமது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான வழிகாட்டல் கைநூலும் பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment