மருதமுனைபாத்திமா சீபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத் துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீட்டு விழா!


கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்,
எ.எல்.எம்.ஷினாஸ்-

ருதமுனை,பெரியநீலாவணை பாத்திமா ஷிபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத் துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(05-02-2023)மாலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட் தலைமையில் நடைபெற்றது.

இந்த நூல் வெளீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல்; கரீம் கலந்து சிறப்பித்தார்.அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுள்ளாஹ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட்.ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஜெசீலா உதுமாலெப்பை ஆகியேரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் எச்.எஸ்.எம்.ஹம்யான் கிறாத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஏ.எல்.எம்.சிஜாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.எ.ஏ.நஹீஜ் அஹமட் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட் நூல் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். பிரதம அதிதி எம்.எப். ஹிபத்துல்; கரீம், அதிதி வை.ஹபிபுள்ளாஹ்,ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இங்கு நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் பெரியப்பா ஏ.நெய்னா முகம்மட்,தந்தை ஏ.எம்.இப்றாகீம்.தாயார் ஆசிரியை ஏ.ஆர் ஹாஜறா ஆகியோர் நூலாசிரியர் பாத்திமா சீபா விடமிருந்து நூலைப் பெற்றுக்கொண்டனர்.மேலும் பிரதம அதிதி மற்றும் அதிதிகளுக்கு நூலாசிரியர் பாத்திமா சீபா இப்றாஹீம் நூலை வழங்கி வைத்தார்.நூலாசிரியரின் உரையுடன் அஷ்செய்க் எ.எச்.எம்.பர்ஸான் நன்றியுரையாற்றினார் ஏ.ஏ.நஹீஜ் அஹமட் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :