தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து (23.2.2023) அன்று வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்கால நலனை சிறப்பாக வெற்றியடையவும் பாடசாலை கல்விக்கான வழிகாட்டுதளுக்கு எடுத்துக் காட்டாகவும் இது அமைகின்றன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளிற்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை கிளையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுபாசனி லியனகே உட்பட பெற்றார்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment