நாளை மட்டு. ஆதீனத்தில் பெரும் சிவனிரவுத் திருவிழா! இந்திய சிவபக்தர் ஹுசைன் சிறப்பு சொற்பொழிவு.!



வி.ரி. சகாதேவராஜா-
ட்டக்களப்பு ஆதினத்தில் நாளை (18) சனிக்கிழமை மாலை பெரும் சிவனிரவுத் திருவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாளை மாலை 3 மணி முதல் ஆறு மணி வரையான காலத்தில் ஆதீனத்தில் உள்ள 108 சிவலிங்கங்களுக்கு அடியவர்களின் கையினால் நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆதீன ஸ்தாபக தலைவர் ஸ்ரீமான் மு. ஜெயபால் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த சிவனிரவு திருவிழாவிற்கு பிரதான சொற்பொழிவாளராக இந்தியாவில் இருந்து வருகைதரும் சிந்தனை மருத்துவர் சிவபக்தர் மருத்துவர் எம்.ஏ.ஹுஸைன் பிரதான உரையாற்ற இருக்கிறார்கள். "திருமந்திரமும் அறிவியல் விளக்கமும்" என்ற தொனிப்பொருளில் அவரது சொற்பொழிவு இடம்பெற இருக்கின்றது.

மேலும் ,கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறையும் திருமதி கிருபாஞ்சனா குழுவினரும் இணைந்து வீணை இசை ஆராதனை மற்றும் கண்ணகி முத்தமிழ் மன்பத்தினரின் சிவலீலை தென்மொடி நாட்டுக்கு கூத்தும் இடம் பெற இருக்கின்றது.

அத்துடன் நான்கு சாம பூஜைகள் தொடர்ச்சியாக இளம்பெற இருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :