மருதமுனை புதுப் புனைவு பதிப்பகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் மருதமுனை ஜமீல் எழுதிய'ஆயத்'கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2023-03-05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூடத்தில் மர்ஹும் மருதூர் பாரி நினைவரங்கில் நடைபெறவுள்ளது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்பிர்தௌஸ் தலைமையில் விழா நடைபெறவுள்ளது.முன்னிலை அதிதியாக எழுத்தாளர் எம்.எம்.நௌஸாத் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.ஓய்வு நிலை ஆசிரியர் ஆபூபக்கர் நஜீம்,எழுத்தாளர் ஜமால்தீன் நௌபாஸ் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெறவுள்ளனர்.
நூல் அறிமுகம் கவிஞர் ஏ.எம்.குர்ஷத், நூல் மீதான வியாக்கியானம் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப்,கவிஞர் சிறாஜ் மஷூர்,கவிஞர் லலித கோபன்,கவிஞர் சித்தி றபீக்கா,வாசகன் தபீப் இஸ்மா ஆகியோர்.நிகழ்ச்சித் தொகுப்பு கவிஞர் எம்.எம்.விஜிலி.அனைவரையும் அன்புடன் அழைக்கிறது மருதமுனை புதுப் புனைவு பதிப்பகம்.
0 comments :
Post a Comment