தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே ஜனாதிபதிக்கு மக்களின் உணர்வுகள் வரும்



பாறுக் ஷிஹான்-
னாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும்.தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.இன மொழி பேதங்களை கடந்து எமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை(12) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கடந்த காலங்களில் ஒரு மாயை ஒன்றினை உருவாக்கினார்கள் இதனால் 69 இலட்சம் பேர் கோட்டபாயவிற்கு தமது வாக்குகளை அளித்தனர்.இன்று அவர் இந்த நாட்டை விட்டு ஓடி சென்று விட்டார்.இந்த மாயையை கூறுபவர்கள் தேர்தல் கால வியாபாரிகளாவர்.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு நாம் இடம்கொடுக்க கூடாது.தற்போதைய ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும்.தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.

இன மொழி பேதங்களை கடந்து எமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.அம்பாறை மாவட்டத்தில் 20 உள்ளுராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.எமது வேட்பாளர்கள் மாநகர நகர பிரதேச சபைகளுக்காக களமிறங்கப்பட்டுள்ளார்கள்.சஜித் பிரேமதாச எமது கட்சி தலைவர் .அவர் வழிநடத்தலில் நாங்கள் மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவோம் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :