தோல்வியை ஏற்றுக்கொண்டமையினால் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது.-திகாம்பரம் கருத்து.



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
ள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயமாக தோல்வியிடையும் என்ற கூற்றினை ஏற்றுக்கொண்டமையினாலே உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார் 18.02.2023. சனிக்கிழமை ஹட்டனில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனிதிகாம்பரம். இந்த அரசாங்கம் தேர்தலை நடாத்த பணம் இல்லையென கூறி தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது எமது
நாடு ஒரு ஜனநாயக நாடு தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் பாரிய தோல்யினை சந்திக்கும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தற்காலிகமாக தேர்தல் பிரச்சாரத்தை
இடைநிருத்திவிட்டு இரண்டு மாதங்களின் பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை
முன்னெடுக்க உள்ளோம். தேர்தலுக்கான திகதி ழூன்று மாதங்கள் தள்ளுபடியானால் வேட்பு மனுக்கல் இரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளபட நேரிடும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாவிட்டால் மக்களை வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு அளுத்தத்தை
கொடுப்போம்.மலையகத்தில் வரலாற்றில் 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரமே பாரிய அபிவிருத்திகள் எமத அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. மின்சார அதிகரிப்பு என்பது நாட்டு மக்கள் அனைவரும் பாரிய கஷ்டத்தினை அனுபவித்துள்ளார்கள் பணம் இல்லையென கூறி தேர்தலை தள்ளுபடி செய்யமுடியாது இரண்டு மில்லியம் ருபாய் பணம் இருந்தால் தேர்தலை நடாத்த முடியும் என குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :