இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டில் சுதந்திரதின நிகழ்வு ஒன்று நேற்று முன்தினம் மாலை கொழும்பு ஜாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் சூரா சபையின் தலைவர் ரி.கே.அசூர் தலைமையில் மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமயத் தலைவர்களான கல்வி அமைச்சின் உதவிப்பணிப்பாளர் கரவில கொட்டுவே தம்மாதிலக்க தேரர் கிண்ணியா மிசன் சுவாமி குணாத்தினந்த சரஸ்வதி கிறிஸ்தவ சமய அருட்தந்தைகளான நிசாந்த குணரத்ன கிங்ஸ்லி வீரசிங்க அஸ்செய்க் அம்கர் கக்கம்தீன் ஆகியோரும் தேசிய சூரா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் பளீல் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரசீத் எம் இம்தியாஸ் பொருளாலளர் மௌலவி நவ்பர் மௌலவி தாசிம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது சமயத் தலைவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தேசத்தை கட்டியெழுப்பும் வகையில் ஒரு அடையாளமாக 10 மரங்கள் நாட்டப்பட்டதுடன் நான்கு சமயத் தலைவர்களின் உரைகளும் இடம் பெற்றன.
இதன்போது சமயத் தலைவர்கள் இந்த நாட்டின் சுதந்திர தினம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் இந்த நாட்டில் அனைத்து சமய மக்களும் நாட்டுப்பற்றுடன் நாட்டுக்கு சேவை செய்யக் கூடியவர்களாகவும் தேநத்தைக் கட்டியயெழுப்ப தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுடன் சகலரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி பேசினர்.
இந்த நாடு அரசியல் ரீதியாக பின்தங்கி குழப்பமான ஒரு சூழ் நிலையில் இருக்கின்றது. பொருளாதார ரீதியாக மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றமை, இனங்களுக்கிடையிலான உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை என்பனவற்றை சீர் செய்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நான்கு சமயத்தவர்களும் ஒன்றாக கைகோர்த்து ஒன்றாக பயனிக்க வேண்டும் என்பதும் வழியுறுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment