தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்ற"இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டம்,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரை பூங்கா முன்றல் பகுதியில் மரநடுகை இன்று( 05) பிற்பகல் இடம்பெற்றது
இதன் போது அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அஸ்கி,கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஆர்.எம்.யசார்,உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ், உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment