- தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் உரையை மல்லியப்புசந்தி திலகர் முன் வைத்தார்.- 92 வது துரைவி பிறந்த தின நினைவுப் பேருவுரை ”சிங்கள மொழியில் மலையகத் தமிழர்களின்பங்களிப்புக்கள்” எனும் தலைப்பில் கலாநிதி .கலா சந்திரமோகன் அவர்கள் நிகழ்த்தினார். துரைவி விருதுகள் வழங்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கிய ஆய்வுக்கான நூலுக்கான விருது இலக்கிய ஆய்வுக் கோட்பாடு கட்டுரைகள் அடங்கிய ந. மயூரரூபனின் “எழுத்தின் இயங்கியல்”; எனும் நூலுக்கான விருதினை ந. மயூர்ரூபன் பெற்று கொண்டார். மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது சிங்கள கவிதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு நூலான இப்னு அஸூமத்தின் 'நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ' என்ற நூலுக்கான விருதினை இப்னு-அஸூமத்தின் சார்ப்பாக வதிரி.சி.ரலீந்திரன் பெற்று கொண்டார்.
பெண் ஆளுமைக்கான ஜெயம் விருதினை நீண்ட காலமாக பத்திகைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பங்காற்றி வரும் திருமதி அன்னலஷ்மி இராஜதுரை பெற்று கொண்டார். ஜெயம் விருதுக்கான ஏற்புரையை திருமதி அன்னலஷ்மி இராஜதுரை முன் வைத்தார். நன்றியுரையை ராஜ்பிராத் துரை விஸ்வநாதன் முன் வைத்தார்.
0 comments :
Post a Comment