கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீட்டில்; வசித்து வந்த ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டு பிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கல்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி பாஸ்கரன் சற்குணதேவி (வயது 52) என்ற 4 பிள்ளைகளின் தாயான ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி தொடர்பில் இல்லை என்றும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லையென அவரை தேடிப் பார்க்கும்படி வவுனியாவில் உள்ள உறவினர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இன்று காலை பிரதேச கிராமசேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசாரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது விட்டின் கதவு ஜன்னல்கள் உடைநது காணப்பட்டதுடன் உயிரிழந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடித்துள்ளனர்.
இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியா நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார். தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாக மரணமடைந்த பெண்னின் சகோhதரி தெரிவிக்கிறார்.
கணவர் யாழ்ப்பாண பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment