கிழக்கின் தென்கோடியில் உள்ள குமுக்கன் ஆற்றங்கரையில் சித்தர்களுக்கே காவல் சக்தியாக விளங்குகின்ற அன்னை மஹாகாளி தேவி சன்னிதியில், இந்த பூமிக்கே அதீத சக்திகளை உயிரூட்டும் அற்புதமான மாபெரும் சண்டி ஹோமம் நேற்றுமுன்தினம் (26) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் முன்னிலையில் இடம் பெற்ற இம் மாபெரும் நான்காவது சண்டி ஹோமத்தின் வேள்வி கிரியைகளை, இலங்கையின் இலங்கை பிரபல இணுவில் தர்ம சாஸ்தா குருகுல வேத வாத்தியார் சிவஸ்ரீ வத்சாங்க குருக்கள் தலைமையிலான நயினை நாகபூஷணி அம்மன் ஆதீன குருக்கள் வாமதேவ கைலாஸபானு குருக்கள் உள்ளிட்ட 10 சிவாச்சாரியார்கள் எட்டு மணி நேரம் சிறப்பாக நடாத்தினார்கள். இவர்கள்அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள்.
ஹோமத்துக்கான திரவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தன.
அடர்ந்த கானகத்தின் மத்தியில் அமைந்துள்ள குமுக்கன் ஆற்றங்கரை மஹாகாளி தேவி சந்நிதியில், சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி சங்கல்பத்தில் இருந்து யாகத்தில் பங்கேற்றார்.
யாகத்தில் சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் ,உப தலைவர் மனோகரன், நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, ஸ்ரீ தியாகராஜா , ஸ்ரீ சகாதேவராஜா , ஸ்ரீ லதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் திருமலை பிராந்திய பிரதம பொறியியலாளர் எந்திரி.தெய்வநாயகம் சுரேந்திரகுமார் ( காரைதீவு) குடும்பத்தினரும் யாகத்தில் பங்கேற்றனர்.
நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு மாபெரும் சண்டி ஹோமம் ஆரம்பமாகியது. தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் ஆதாரமாக இருக்கும் 13 சக்திகளுக்கும் யாகத்தில் சிறப்பு பூஜைகள், 64 உபசாரங்கள் இடம் பெற்று
பிற்பகல் 4 மணிக்கு பூர்ணாகுதி இடம் பெறுதலுடன் ஹோமம் நிறைவுக்குவந்தது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி சகல சித்தர்களுக்கும் செந்நிற வேஷ்டிகளை வஸ்திரதானம் வழங்கி வைத்தார்.
குமண பறவைகள் சரணாலய வனத்துறை அதிகாரி பி.சமரநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். ஊடகத்துறை சித்தர் வி.ரி.சகாதேவராஜா வெட்டி வேர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
யாகத்தில் சித்தர்கள் குரல் அமைப்பின் உறுப்பினர்களான
கிஷானன்,ரூபன்,டிரோன் ,அருள் , மதுஸ்,அருண்,பிரதீஸ் , ஷாகர்,பிராஜானந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment