வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடியில் இயங்கி வரும் அந் - நூர் அகடமியில் கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
அகடமியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந் - நூர் அகடமியில் கல்வி கற்று சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களும், கடந்த ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண தொழில் ஆணையாளர் ஏ.தாஹிர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.அஜ்மீர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கந்தளாய் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி, அகடமியின் நிர்வாகத்தினர், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment