திகாவின் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் திலகருடன்இணைந்தார் !



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
ரிய வயதில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதபோது நாம் தனித்தீர்மானங்களை எடுக்க வேண்டி வருகிறது என தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணியின் செயலாளரும் முன்னாள் இளையோர்பாராளுமன்ற உறுப்பினருமான சதீஷ் குமார்
தெரிவித்துள்ளார்.

நோர்வூட் நகரில் இடம்பெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும்போதே சதீஷ் குமார் மேற்கண்டவாறு தெரிவத்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகயநான் அந்தப் பதவியில் இருக்கும் போது தேசிய நிகழ்வு ஒன்றில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததிலகராஜ் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

உடனே என்னை ஊக்குவித்து கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கினார். நான்அம்பகமுவ பிரதேச சபைக்குத் தெரிவாகாதபோதும் தன்னுடைய பாராளுமன்ற செயலாளர் பதவியைஇதரதியோகபூர்வமாக வழங்கி என்னைத் தொடர்ந்தும் ஊக்குவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு
அநீதி் இழைக்கப்பட்ட போதும் அவர்இரத்தனபுரியல் மலையகப் பாராளுமன்ற
உறுப்பினர் ஒருவரைக் கொண்டுவர உழைத்தார்.

தேசிய பட்டியலிலும் அவருக்கு நியமனம் வழங்கப்படாதபோது அவர் அதனைப் பொருட்டாகக் கொள்ளாதுபொறுமையாக தனது அரசியலை முன்னெடுத்தார். தன்னோடு ஒருவரையும் கூட கட்சியில் இருந்து அழைத்துச்செல்லாத நாகரிகத்தை அவர் கடைபிடித்தார்.

அவரால் உருவாக்கப்பட்ட என்னைப் போன்ற பலரும் அவரைத் தொடர்பு கொண்ட போதும் அவர் அமைப்பை, கட்சியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் அங்கேயே தொடர்ந்து நிலைத்து நான் அமைத்துக் கொடுத்த பாதையில்முன்செல்லுங்கள் என எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நாங்களும் அப்படியே செய்தோம். ஆனால் அவர் அமைப்பில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில்வெளியேற்றப்பட்டப் பின்னர் தொழிலாளர் தேசிய முன்னணியில் எந்த இயக்கமும் இல்லை. வெறுமனேஉறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் யாரும் இறந்துவிட்டால் இறுதி அஞ்சலி செலுத்துவதும்தான் நடக்கிறது. பொறுத்திருந்த என்னைப் போன்ற இளஞர்களுக்கு இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்
போட்டயிடவும்வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

நான் இளையோர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன். அப்படி பயணித்த எங்கள் அரசியல் பயணம் அங்கேசூனியமாகவே தெரிகிறது. தலைமைத்துவத்தை ஒரு சிலரே கைக்குள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள்இளைஞர்களை வளரவிடமாட்டார்கள். தலைவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு தமது பதவியைத் தக்கவைப்பதிலேயே
அவர்கள் குறியாக உள்ளனர். உரிய வயதில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதபோது நாம் தனித்தீர்மானங்களை எடுக்க வேண்டி வருகிறது .

திலகர் அவர்கள் தனியாக அமைப்பைத் தொடங்கிய போதும் எங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காத நாகரீகத்தைக்கடைபிடித்தார். கட்சயில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் மாத்திரமே அவரோடு இணைந்து கொண்டார்கள். ஆனால் அவரது மலையக அரசியல் அரங்கம் இப்போது தேர்தல் களத்திற்கு வந்ததும் தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்.
அரங்கத்தின் வேட்பாளர்களை அழைத்து அறைக்குள் அமர்த்தி்பேரம்பேசி்
விலைக்கு வாங்கும் அநாகரீகமான காட்சிகளைக் காண்கிறோம்.


எனவேதான் இனிமேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் எனும் பதவியில் நீடிக்காமல்அதனைத் தூக்கிவீசிவிட்டு மலையக அரசியல் அரங்கத்துடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்தேன்.


இளைஞர்களின் திறமையை மதித்து உரிய இடத்தினை வழங்கி வழிகாட்டும் திலகரே
இனி எங்கள் தலைவர். அவரதுகரத்தை பலப்படுத்த மலையக இறைஞர்களை அரங்கத்தில்
இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும்தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :