விபுலானந்தாவின் வைரவிழா சிறப்பு மலர் வெளியீடு!



காரைதீவு சகா-
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் வைரவிழா சிறப்பு மலர் வெளியீடு நேற்று முன்தினம் விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது .

கல்லூரி அதிபர் எம். சுந்தரராஜன் தலைமையிலும் கௌரவ தலைவர் முன்னாள் அதிபர் தி. வித்யாராஜன் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மேனாள் கல்வித்துறை பேராசிரியர் கலாநிதி செல்லையா அருள்மொழி கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எந்திரி.என்.சிவலிங்கம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் உள்ளிட்ட பல சிறப்பு கௌரவ விசேட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
வைரவிழா சிறப்பு மலர் காரைதீவின் மூத்த சேவையாளர்களான முன்னாள் தவிசாளர்கள் இ. விநாயகமூர்த்தி டாக்டர் எம். பரசுராமன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
சமர்ப்பண உரையை கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆலோசகரும் உதவி கல்வி பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்த
நூல் நயவுரையை ஆசிரியை விபுல இளவல் திருமதி அருந்தவவாணி சசிகுமார் நிகழ்த்தினார்.
முன்னாள் பொன் விழா அதிபரும் கல்வித்துறைத் தலைவருமான பேராசிரியர் கலாநிதி செல்லையா அருள்மொழி , கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம் , முன்னாள் வைரவிழா அதிபர் தி.வித்யாராஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விவேகானந்தாவில் பயின்று வைத்தியர்களாக பொறியியலாளர்களாக கல்வியாளர்களாக நிர்வாகிகளாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற பலர் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய கல்லூரி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் பவளவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.
மேடையில் இடையிடையே நடன இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :