அஸ்ஹர் இப்ராஹிம்-
காக்காச்சிவட்டை விழிக்கதிர் விளையாட்டு கழகம் 32 விளையாட்டு கழகங்களை உள்ளடக்கி நடத்திய 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினையும் 20,000 ரூபாய் பணப்பரிசிலையும் பெற்று கொண்டது.
இது இவ் வருடத்தில் (2023) இக் கழகத்தினால் பெறப்பட்ட இரண்டாவது கிண்ணமாகும்.
முதலில் துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டு கழகம் 8 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரிலியன்ட் விளையாட்டு கழகம் 7.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 29 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது.
மெக்ஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ஜது 20 பந்து வீச்சுகளுக்கு 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டதுடன், மிதுசான் ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்சியாக கைப்பற்றி ஹெற்றிக் சாதனையையும் ஏற்படுத்தியிருந்தார்.
0 comments :
Post a Comment