ஊடகப் பணியை கௌரவித்து மருதமுனை காதருக்கு 4ஜிஹேன்லூம் விருது(4G HANDLOOM AWARD)வழங்கி கௌரவித்தது



ருதமுனையச் சேர்ந்த பி.எம்.எம்.ஏ.காதர் அவர்கள் ஊடகத்துறைக்கு ஆற்றிய உயரிய பணியை கௌரவித்து மருதமுனை ஆவணக்காப்பகத்துடன் இணைந்து 4ஜிஹேன்லூம் விருது(4G HANDLOOM AWARD)வழங்கி கௌரவித்தது.

4ஜிஹேன்லூம் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் பத்றுஸ்ஸமான், பஹத்ஸமான் மற்றும் இந்த நிகழ்வில் பங்குகொண்ட மருதமுனையின் நான்கு நீதிபதிகளான யாழ்ப்பாணம்,வட மாகாணத்திற்கான குடியியல் ,மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத்லெப்பை அப்துல் மனாப்,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை தொழில் நியாமன்றின் தலைவரும்,மேலதிக நீதிவானுமாகிய வி.எம்.சியான்,பொத்துவில் நீதிவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும். நீதிவானுமாகிய ஏ.சி.றிஸ்வான்,அக்கரைப்ற்று மாவட்ட நீதிபதியும்,நீதிவானுமாகிய எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் மருதமுனை ஆவணக்காப்பகத்தின் ஸ்தாபகர் ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் ஆகியோரும் இணைந்து இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.

ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய 'மருதமுனை சமாதான நீதிபதிகள்'நூல் வெளியீட்டு விழாவில் (28-01-2023) இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :