13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமாகவே தேசிய ரீதியிலான பிரிவினையற்ற தேசமாக இலங்கையை மாற்றமுடியும்.கல்வி இராஜாங்க அமைச்சர்



மதுநாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்புதிருத்தச்சட்டங்கள் இந்தநாட்டின் சிறுபான்மையினமக்களுக்கு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாததொன்றாகவே இருந்து வருகின்றது. அதனடிப்படையில் 13வது அரசியலமைப்புதிருத்தச்சட்டமும் இருக்கக்கூடாதென்பதே எனதுகருத்தாகும்,எனகல்வி இராஜாங்கஅமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமய, கலை, கலாசார விழுமியங்களோடு சுதந்திரமாக வாழவேண்டுமென்பதே எல்லோருடைய எதிர்ப்பார்பாகும்.
அந்தவகையில் 13வது திருத்தச்சட்டம் என்பது வடகிழக்கு மக்களுக்குமட்டுமன்றி, முழு நாட்டிற்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளது. அரசியலமைப்புகளை மாற்ற நாட்டை குட்டிச்சுவராக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது என்பதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெளிவுபட கூறியுள்ளமை எமக்கு சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும்; தருவதாகவுள்ளது.

நாடு கடந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறைந்து தற்போது ஒரு சுமூகமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியானதுஇஎதிர்வரும் காலங்களில் சீராகும் என்பதை ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க அவர்கள் உறுதியாக கூறுகிறார். அதேபோல அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக வேண்டிமக்களைத் திசை திருப்பும் நோக்கம் ஒருநாளும் கைகூடாது என்பதையும் தனக்கு உறுதியாக கூறமுடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு பல தசாப்தங்கள் முடிவுற்ற நிலையில்இ அதில் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்லது அது தேவையில்லை என்ற தொனியில் பேசுவதே எவ் எகையிலும் நன்மையளிக்கப்போவதில்லை. சட்டங்கள் வகுக்கப்படுவது மக்களின் நன்மையை கருத்திற்கொண்டேயொழிய இதனிப்பட்டவர்களின் நலனுக்காகவோ அல்லது இனவாதம் பேசும் அரசியல் கட்சிகளின் நன்மைக்காகவோ இல்லை.

13வது திருத்தச்சட்டத்தின் பின் 8 திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது அது 23 என்றவகையில் உள்ளது.
புதியதிருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்படும் போது மௌனியாக இருந்தவர்கள்; சுமார் 40 வருடங்களுக்கு பிறகுஅதனை விமர்சனம் பண்ணுவதோ அல்லது அதனை எமது அரசியலமைப்பில் இருந்து நீக்க எத்தனிப்பதோ பல்வேறு சிக்கல்களுக்கு வித்திடும் என்பது வெளிப்படை என மேலும் தெரிவித்துள்ளார்.

சில்மியா யூசுப்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :