அமர்ர் லெனினின் துணைவியார் , அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, லெனின் தாயார் அஞ்சலி தீபம் ஏற்றிதுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதன் போது, வருகைதந்திருந்த அனைவரும் மெழுகுதிரி ஏற்றியிருந்ததுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் தலைவர் மு. ராமச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தியதையடுத்து , மல்லியப்புசந்தி திலகர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
பின்னர் , நூல் தொகுப்பாசிரியர் ஜீவா சதாசிவம், நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் தலைவர் ஏற்பாட்டாளர் மு.இராமச்சந்திரன் அமரர் லெனின் மதிவானனின் தாயாருக்கு நூலின் முதற்பிரதியை வழங்கி வைத்தனர்.
நூல் வெளியீடு நிகழ்வில், மு. சிவலிங்கம் தலைமையுரையை நிகழ்த்த பேராசிரியர் பால. சுகுமார் சிறப்புரையாற்றினார்.
அமர்ர் லெனினின் புதல்வர் பிடல் கெஸ்ட்ரோவிற்கும் , அவரது இளைய சகோதரரும் நீதிபதியுமான இரா.ஜெ. ட்ரொக்ஸியின் புதல்வியான மார்க்ஸ் தீட்சண்யா ஆகியோருக்கு பேராசிரியர் பால. சுகுமாரின் கரங்களில் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து , எழுத்தாளர் சிராஜ் மஷஹூர் , விரிவுரையாளர்களான சுமதி அன்பரசு , ஜெ. சற்குருநாதன் , சிவா ஜேசுநேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பிரதி அதிபர், ச. வில்சன் நூல் பற்றிய உரை நிகழ்த்தினார். அதனையடுத்து, அமரர் லெனின் இளைய சகோதரரும் நீதிபதியுமான இரா. ஜெ.ட்ரொட்ஸ்க்கி குடும்பத்தின் சார்பாக உரை நிகழ்த்தினார். பின்னர் நன்றியுரையுடன், நிகழ்வு இடம்பெற்றது.
0 comments :
Post a Comment