எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்திற்கான வேட்பாளராக கட்சியின் அவ்வட்டார அமைப்பாளர் எம்.எச்.நாஸர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாளிகைக்காடு கிழக்கு வட்டார மத்திய குழுக் கூட்டம்
கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான எம்.ஐ.எம்.பிர்தெளஸ், கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றபோதே மத்திய குழுவினால் அவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இதேவேளை மு.கா.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளிக்குச்சென்று மத்திய குழு உறுப்பினர்களையும் வேட்பாளர்களையும் மக்களையும் சந்தித்தித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment