இருநாள் இலவச ஊடக செயலமர்வு



நூருல் ஹுதா உமர்-
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இருநாள் இலவச ஊடக செயலமர்வு இம்மாதம் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 17 - 35 வயதிற்குட்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் இச்செயலமர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த செயலமர்வில் செய்தி எழுதும் திறன்கள், தொலைபேசி ஊடகவியல் (Majo Journalism) ஆகியவை கற்பிக்கப்படவுள்ளதுடன் இதனைத் தொடர்ந்து முற்றிலும் இலவசமாக 6 மாத கால ஊடக கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழுப்பெயர், விலாசம், பிறந்த திகதி, வயது, தேசிய அடையாள அட்டை இல, வாட்ஸ்ஆப் இல, கையடக்க பேசி இல, என்பவற்றை 077 350 850 9 என்ற வாட்ஸ்ஆப் இலக்கத்திற்கு அனுப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :