கோரக்கர் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டத்தின் பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு பழவெளி சிவன் ஆலயத்தில் வெ. மோகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தலைவரும் அதிபருமான சோ.இளங்கோவன் அவர்களும், பிரதேச ஆலய ஒன்றியச் செயலாளர் து. காந்தன் அவர்களும், சிறி கோரக்கோவில் மாரியம்மன் கோவில் செயலாளர் அழகுராஜன் அவர்களும், இளைஞர் கழக தலைவர் லுசாந் அவர்களும், இளம் விஞ்ஞானி சோ. வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு தைப் பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர். இதற்கான நிதி அனுசரனையினை சிவனருள் அறக்கட்டளையின் தலைவர் டொக்டர் ஜெயமோகன் அவர்கள் வழங்கி வைத்தார். சம்மாந்துறை கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் பல சமூக, சமய மற்றும் கல்விக்கான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :