திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வேண்டுகோளுக்கினங்க கந்தளாய் பேராறு மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நிலையம் இன்று(27) கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கந்தளாய் பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தையல்,மனையியல் மற்றும் கைவினை பயிற்சிக்கான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,
தெரிவு செய்யப்பட்ட யுவதிகள் குறித்த பயிற்சி நெறிகளை தொடர்வதற்காக இப்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்ஷா குமாரி, கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவகர், பிரதேச செயலக அதிகாரிகள் பேராறு மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், உப தலைவர் உட்பட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். பைரூஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எம்.றியாஸ் மற்றும் பயிற்சி நெறியில் கலந்து கொண்டோர் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment