ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை உயர்தர கலைப்பிரிவு மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான்(20) என்பவர் இன்று காலை குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்கு சென்று, சகோதரர் ஒருவருடன் குளித்துக் கொண்டிருக்கும் போது பாரிய அலையொன்றினால் இருவரும் அள்ளுண்டு சென்று, மற்றுமொரு அலையொன்றினால் கரைக்கு வந்தபோது ஒருவர் மரணித்தும் மற்றையவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுள்ளனர்.
ஆபத்தான நிலையிலிருந்த சகோதரர் உபைதுர்ரஹ்மான் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க.பட்டிருக்கிறார்.
மரணமடைந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் என்ற மாணவனின் மரண விசாரணைகளை ,ஏறாவூர் பொலிசாருடன் சென்ற மரண விசாரணை அதிகாரி. எம்.எஸ்.எம். நஸீர் முன்னெடுத்தார்.
0 comments :
Post a Comment