பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர பாடசாலை மாணவர்தின விழா பாடசாலை முதல்வர் திரு எம்.சபேஸ்குமார் தலைமையில் பாடசாலை கலைக் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை வலயக்கல்விப் பணிமனையில் கடமை புரியும் உதவிக்கல்விப்
பணிப்பாளர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த இப் பாடசாலையின் பழைய மாணவி வைஸ்ணவி பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், உயர்தர கணித , உயிரியல் , வர்த்தக, கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment