திருக்கோவிலில் கவன ஈர்ப்பு போராட்டம்!



வி.ரி. சகாதேவராஜா-
க்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  ( 5) வியாழக்கிழமை திருக்கோவிலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இக்கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.
ஒருமித்த குரலினை உரக்கச் செல்வோம் என்ற அடிப்படையில் நேற்று திருக்கோவில் ஆதார வைத்திய சாலை முன்பாக இப் போராட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.

போராட்டத்தில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி. கமலராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாணவர் மீட்பு குழு தலைவர் செல்வராஜா கணேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கலந்து கொண்டார்கள்.

சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் .

சுமார் ஒன்றரை மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :