இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையின் மூன்றாவது தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கே.அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைதென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சாய்ந்தமருது திடீர் மரணவிசாரணை அதிகாரி மர்ஹும் அல்ஹாஜ் றாஸிக் காரியப்பர் தம்பதிகளின் புதல்வராவார்.
குறித்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையின் தலைவர்களாக முறையே சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல்.அப்துல் ஹலீம் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றிப்தி ஆகியோர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment