சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இளையோருக்கான இருநாள் ஊடக செயலமர்வின் இறுதிநாள் செயலமர்வும் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்(22) ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் நடைபெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ. றிப்கா அன்ஸார் கலந்து கொண்டார்.
இதில் கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் இணைப்பாளர் எம்.பிரதீபன்,வளவாளர் என்.மணிவாணன்,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர்,சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான்,உதவிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எச்.எம்.ஹாரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் கலந்து 37 இளைஞர், யுவதிகளுக்கு அதிதிகளால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விசேட அம்சமாக சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச அடிப்படை அமைப்புக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் அவர்களின் புதுமையான சிந்தனையில் உதித்த "பெண்களை ஊடகத்துறையில் வலுப்படுத்தல்" எனும் திட்டத்தினூடாக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவிகளையும் ஊடகத்துறைக்குள் உள்வாங்கும் அவரது சிந்தனையையும் முயற்சியையும் பாராட்டி இதன்போது சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிதிகளால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில் அண்மையில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட நிகழ்வின் பிரதம அதிதி அதிபர் எம்.சீ. றிப்கா அன்ஸார் சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகளால் அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வின் வரவேற்புரையினை சிலோன் மீடியா போரத்தின் பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் நிகழ்த்தியதுடன் நிகழ்வினை அறிவிப்பாளர் சிறாஜ்டீன் தொகுத்து வழங்கினார்.
0 comments :
Post a Comment