பாரம்பரியத்தை எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு பாடசாலைக்கும் உள்ளது! கல்முனை பற்றிமா அதிபர் சகோ. சந்தியாகு.



விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா-
மிழரின் பண்பாடு பாரம்பரியம் அடையாளம் போன்றவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் சார்ந்த பாடசாலைகளுக்கும் உள்ளது .
என்று கிழக்கில் புகழ் பூத்த கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் உரையாற்றிய கல்லூரி அதிபர் சகோ சந்தியாகு செபமாலை தெரிவித்தார்.

மேற்படி பாடசாலையின் தைப்பொங்கல் திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மாட்டு வண்டிலில் பொங்கலுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் பற்றிமா பெண்கள் பிரிவிலிருந்து ஊர்வலமாக விளக்கங்களுடன் வாழை தோரணங்களோடு ஆண்கள் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் இடம் பெற்றது. அதிபர் சகோ.சந்தியா அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அங்கு பொங்கல் பானைக்கு பால் ஊற்றினார்கள் .சிறப்பு அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மின்சார சபை பொறியாளர் வி.ரி.சம்பந்தர் கலந்து சிறப்பித்தார்.
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.

அங்கு அதிபர் சந்தியாகு மேலும் பேசுகையில்.
இன்று தமிழர்களின் உடை என்ன அவர்களின் பாரம்பரியம் என்ன என்பது தெரியாமல் பலர் இருக்கின்றார்கள். அதேபோன்று தைப்பொங்கலின் முக்கியத்துவம் என்ன அதன் பாரம்பரியம் என்ன என்பது தொடர்பாக எதிர்கால சந்ததிக்கு அதனை முறைப்படி எத்தி வைக்க வேண்டும். அதில் கணிசமான பங்கு பாடசாலைகளுக்கும் உண்டு என்றார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :