பிரதேச மட்டத்தில் மக்களின் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டம் !



மாளிகைக்காடு நிருபர்-
நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக அனைவருக்குமான உரிமைகளும் சேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுதல் வேண்டும். என்ற அடிப்படையில் ACTED நிறுவனத்தின் அணுசரனையில் இறக்காமம் ஹிக்மா சகவாழ்வு மன்றம் இணைந்து செயற்படுத்தும் "சகவாழ்வை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு" எனும் செயலமர்வு அம்மன்றத்தின் தலைவர் எம்.ஐ. பாயிஸ் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் இந்திரசிறி யசரட்ன பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற இனவெறுப்பு செயற்பாடுகளின் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை. நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத் திட்டம் முதலில் மக்களின் நேரடி பங்கேற்பின் ஊடாகவே சகவாழ்வை உறுதிப்படுத்க முடியும். இந்நிகழ்விற்கு, வடக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் ஏ.அமீர் சிறப்பு வளவாளராக கலந்து கொண்டார். மேலும், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.சாமிலா, எம்.எல். கிஷோர் ஜஹான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம். சபானா உட்பட சகவாழ்வு மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :