தாய்மார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் போசனை மிகுந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.ரிஸ்பின் அவர்களினால் தாய் சிசு போசாக்கு திட்டத்தின் கீழ் தாய்மார்களின் குருதிச் சோகை நோயை குறைப்பதற்காகவும் முகாமைத்துவம் செய்வதற்காகவும் திருக்கோவில் தங்க வேலாயுதபுரம் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் போசனை மிகுந்த பயிர் இனங்களை நடும் நிகழ்வு நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் தாய்மார்களின் குருதிச் சோகையின் அளவு 28 வீதமாக காணப்படுகின்றது அதேபோன்று பொத்துவில் மற்றும் இறக்காமல் பிரதேசங்களில் 40% காணப்படுகின்றது இதனை குறைத்து தாய்மார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களின் கீழ் ஒரு பகுதியாக போசனைக் கன்றுகளை நடும் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த நிகழ்வில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச வைத்திய வைத்திய அதிகாரி பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள். குறித்த திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட செயலகம், திருக்கோவில் பிரதேச செயலகம், விவசாயத் திணைக்களம், Assets Based Community Development organization என்பன ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :