தொற்றுநோய் தொடர்பாக அம்பாறை முதல் அறுகம்பை வரை விழிப்புணர்வு பைசிக்கிள் பவனி! திருக்கோவிலில் இளநீர் தாகசாந்தி!



வி.ரி.சகாதேவராஜா-
க்கள் மத்தியில் பரவி வரும் தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பவனி அம்பாறை தொடக்கம் பொத்துவில் அறுகம்பை வரை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இப்பவனி அம்பாறை பொது வைத்தியசாலை ஏற்பாட்டில் இடம் பெற்றது.

அம்பாறை பொது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் படையினர் இணைந்து மக்கள் மத்தியில் பரவி வரும் தொற்று நோய்(நீரழிவு இதயநோய் உயர் இரத்த அழுத்தம் சீறுநீரகநோய்கள் புற்று நோய்) தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பவனி நேற்றைய தினம் அம்பாறை தொடக்கம் பொத்துவில் அறுகம்பை வரை இடம்பெற்றது.

இப் பயணமானது அம்பாறையில் இருந்து ஆரம்பமாகி இறக்காமம் அக்கரைப்பற்று ஊடாக திருக்கோவில் பாதை ஊடாக அறுகம்பையை சென்றடைந்தது.

இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்குபற்றியவர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடானது திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் காஞ்சிரங்குடா முகாம் படையினரின் உதவியுடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் மற்றும் கட்டளைத்தளபதி விபுலசந்திரஸ்ரீ காஞ்சிரங்குடா படைப்பிரிவின் கட்டளை தளபதி மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய கிராம சேவையாளர் நிருவாக உத்தியோத்தர்,திருக்கோவில் ஆதாரவைத்திய சாலை உத்தியோத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படையினர் என பலரும் கலந்து கொண்டனர்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :