திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மயில் சின்னத்தில் அனைத்து சபைகளிலும் தனித்து போட்டியிடும் என மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்று (15) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல பிரச்சினைகள் நண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளன இவ்வாறானவற்றை தீர்க்கவும் பிரதேச பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் எமது கட்சி சகல சபைகளளையும் கைப்பற்றுவதற்காக நல்ல பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். காணி பிரச்சினை இன்னோரன்ன பல பிரச்சினைகள் உள்ளன இதனை கருத்திற்கொண்டு ஆட்சியை கைபற்றுவதன் ஊடாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஊடாக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
0 comments :
Post a Comment