கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஏ.எல். மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம்(வியாழக்கிழமை) குறித்த மனு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை குறித்த இடைக்கால தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி மனுவை மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ. ஆர். எம். அசீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment