அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் 100வது ஆண்டு விழா 19 ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலமா சபையின் தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கௌரவ அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன, மற்றும் சபாநாயகா் மகிந்த யாபா அபேவர்த்தன, அமைச்சா்களான விஜயதாச ராஜபக்ச, விதுர விக்கிரமநாயக்க, அலி சப்ரி, நசீர் அஹமட், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுனா் ஏ.ஜே. முசம்மில் , பாக்கிஸ்தான் பங்கதேஸ், சவதிஅரேபியா, பலஸ்தீன், துருக்கி , போன்ற நாடுகளின் துாதுவா்கள், முப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளா், உட்பட விசேட பிரமுகா்கள் வருகை தந்திருந்தனா்.
இந் நிகழ்வில் ஜம்மியாவின் நுாற்றாண்டை முன்ணிட்டு தபால் உரையும் 25 ருபா பெறுமதியான முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டு ஜனதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தபால் ஊடக இராஜாங்க அமைச்சா் பதில் தபால் மா அதிபரும் கலந்து கொண்டனா்
0 comments :
Post a Comment