தியாவட்டவான் அர்ரஷாத் ARPL மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரை சுவீகரித்த பேத்தழை இளத்தளிர் அணி சுவீகரித்தது.
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் அர்ரஷாத் விளையாட்டுக்கழகம் நடாத்திய ARPL மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரை பேத்தழை இளத்தளிர் அணி சுவீகரித்துக் கொண்டுள்ளது.
17 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப்போட்டி தியாவட்டவன் அரஃபா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் தியாவட்டவான் அர்ரஷாத் அணியும் பேத்தழை இளத்தளிர் பங்குபற்றின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பேத்தழை இளத்தளிர் அணி ஜந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய அர்ரஷாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
தியாவட்டவான் அர்ரசாத் விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்று தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜீ. அலெக்ஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்துவீச்சாளராக க. ராகுல் தெரிவு செய்யப்பட்டார்.
தியாவட்டவான் அர்ரஷாத் விளையாட்டுககழகத்தின் தலைவர் ஏ.எம்.சர்ஜுன் மற்றும் உப தலைவர் ஏ.எம்.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி, வாழச்சேனை பிரதேச செயலக தியாவட்டவான் கிராம உத்தியோகத்தகர் மீராமுகைதீன் அன்வர் சாதாத் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment