மருதமுனை அரசசேவையாளர் அமையத்தின் புதிய நிருவாகப் பிரகடனமும், அமையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஓய்வு நிலை நிருவாக சேவை அதிகாரி ஏ.எச்.எம்.அன்சாருக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-01-2023)காலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது ஆறு வருட கல்விச் சேவையிலும்,32 வருட நிருவாக சேவையில் இருந்தும்,அமையத்தின் தலைவர் பதவியில் இருந்தும் ஒய்வு பெற்ற ஏ.எச்.எம்.அன்சார் அவர்களின் சேவையைப் பாராட்டி மருதமுனை அரசசேவையாளர் அமையத்தின் ஆளுனர் சபை உறுப்பினரும்,யாழ்ப்பாணம், வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியுமான தாவூத் லெப்பை அப்துல் மனாப் மற்றும் அரசசேவையாளர் அமையத்தின் புதிய தலைவரும்,ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம் ஆகியோர் இணைந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் மருதமுனை அரசசேவையாளர் அமையத்தின் புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்:-தலைவர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், பதிவாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்,செயலாளர் எம்.என்.றம்ஸான் நிருவாக உத்தியோகத்தர் கல்முனை பிரசே செயலகம், பொருளாளர் இஸட்.எம்.ஜாபிர் சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சாய்ந்தமருது,
உப தலைவர்கள் டொக்டர் ஏ.எம்.பாஸி, மாகாணப் பணிப்பாளர் கால்நடை அபிவிருத்தி திணைக்களம், கிழக்கு மாகாணம்.,ஏ.ஆர்.எம். சாலிஹ் சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலகம் கல்முனை, உதவிச் செயலாளர் ஏ.எம்.கைதர்,கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர் மருதமுனை, கணக்காய்வு உத்தியோகத்தர்கள் வை.ஹபீபுள்ளா கணக்காளர் வலயக் கல்விக் காரியாலயம் கல்முனை, யூ.எல்.ஜவாஹிர், கணக்காளர், பிரதேச செயலகம்.கல்முனை.இவர்களுடன் 17 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment