சாய்ந்தமருதில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சாத்தியம் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரித்த நிலையில் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமொன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பிரதேச மக்கள் தங்கள் வீட்டுச் சூழல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு .எல்.எம் நியாஸ் பொதுமக்களை கேட்டுள்ளார்.

வீட்டுச்சுற்றுப் புற சூழலில் காணப்படும் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களை கல்முனை மாநகர சபையின் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகளில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வீடுவீடாகச் சென்று பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபடும் வேளையில் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாகவுள்ள இடங்களை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு எல் எம் நியாஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :