காரைதீவில் ஏழு தேர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற திருவாதிரை தீர்த்தோற்சவம்!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு இந்து சமய விருத்தி சங்கம் எல்லா வருடாவருடம் நடத்தி வரும் திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவை ஊர்வலத்தின் இறுதி நாளான இன்று(6) வெள்ளிக்கிழமை ஏழு தேர்கள் சகிதம் திருவாதிரை தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஏழு ஆலயங்களின் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் சகிதம் நடராஜர் தேர் அதிகாலை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

இந்த அதிகாலை ஊர்வலத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று பத்தாம் நாள் ஊர்வலம் நேராக பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தை சென்றடைய அங்கு திருவெம்பாவை பாடப் பட்டது.

அங்கிருந்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலம் சகல ஆலயங்களுக்கும் சென்று இறுதியில் சமுத்திரத்தை அடைந்தது.

அங்கு வீரபத்திரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரூபன் ஐயா விஷேட அபிஷேக பூஜை நடாத்தினார்.
காலை 11 மணியளவில் சமுத்திரத்திலே திருவாதிரை தீர்த்தம் இடம் பெற்றது.
சமுத்திரம் சீற்றமாக இருந்த காரணத்தால் பக்தர்கள் முழுமையாக இறங்கி நீராட அனுமதிக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :