பெருகி வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளை தடுக்க நாடுபூராகவும் விழிப்பூட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திலும் போதைப்பொருள் முற்தடுப்பு தொடர்பான விசேட செயலமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.
வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளரும் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம்.எஸ்.கே.ரகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கான், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் எம்.எச்.முர்ஸிதீன் ஆகியோர்களுடன் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.அஜ்மீர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்குடா கிளை பிரதி தலைவர் ஏ.பீ.எம்.முஸ்தபா இஸ்லாஹி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித உரிமை ஆர்வலர் எம்.ஐ.எம்.நவாஸ் ஸலாமியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment