ஏ.எல். மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால போராட்டத்தின் பின்னர் கடந்த 14.02.2020ஆம் திகதி வெளிவந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகையில்
சாய்ந்தமருதுக்கான நகரசபை அறிவிப்பு வெளிவந்திருந்தது. இச்சபையின் ஆரம்ப தினமாக 2022 மார்ச் 20ஆம் திகதியெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாய்ந்தமருது மக்களின் சுமார் 33 வருட போராட்டத்தின் அறுவடையாக, நகரசபை பிரகடனம் வெளிவந்திருக்கும் இச்செய்தி இம்மக்களுக்கும் மண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
பின்னர் கடந்த 19.02.2020இல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சாய்ந்தமருது நகரசபை விடயம் பேசப்பட்டு, அதுகுறித்த அறிவிப்புக்களை வெளியிடும் வாாரந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன பின்வரும் கூற்றுக்களைத் தெரிவித்தார்.
“சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்காக, 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது” என்றும், “நாடு முழுவதும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இதனை இடை நிறுத்தியுள்ளதாகவும், அதனை முற்றாகத் தடை செய்யவில்லை” எனவும், “இந்த வர்த்தமானி தொடர்பில் கடந்த சில நாட்களாக சிலர் முன்வைத்து வரும் எதிர்ப்புக்களால் இந்த வர்த்தமானியை இரத்துச் செய்யவில்லை” என்றும், “சாய்ந்தமருது நகரசபையை தற்காலிகமாக இரத்துச் செய்வதற்காக அமைச்சரவை எடுத்த தீர்மானம் வெகு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” என்ற கருத்துக்களை அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment