மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமய மற்றும் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் மருதமுனை இறை இல்லப் பணியாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் "அழகிய தொனியில் அதான் சொல்வோம்" என்ற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்கு அண்மையில்(15.01.2023) மருதமுனை மக்பூலியா ஜூம்ஆ பள்ளிவாசலில் செஸ்டோ நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும்> மருதமுனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பதில் தலைவரும்> மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷேய்க் எப்.எம்.ஏ அன்சார் மௌலானா (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் நஜிமுதீன்(ஹாமி) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மருதமுனை பிரதேசத்திலுள்ள சுமார் 20 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 21 முஅத்தின்-அதிகாரிமார் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். வளவாளர்களாக செஸ்டோ நிறுவனத்தின் பிரதித் தவிசாளரும்> இறக்காமம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளருமான அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் எம்.எஸ்.எம். றஸ்சான்(நளீமி)>வாழைச்சேனை அந்-நஹ்ஜா அரபிக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் எம்.ஐ.எம். இஸ்ஸத் (நஹ்ஜி)>காத்தான்குடி ஜாமிஉல் லாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் பிரதம பேஷ் இமாம் அல்-ஹாபிழ் ரிஸ்வி ஹனிபா மற்றும் செஸ்டோ நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் றிலா கமால்தீன்(நளீமி) ஆகியோர் செய்முறை மற்றும் பல்லூடகம் ஊடாக பயிற்சியளித்தனர்.
செஸ்டோ நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினரும்>மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாமுமான அஷ்-ஷேய்க் அல்-ஹாபிழ் ஏ.ஆர். பைசல் கியாஸ் (பலாஹி)அவர்களினால் முஅத்தின்-அதிகாரியார்மார் அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது.செஸ்டோ நிறுவனத்தின் சமய மற்றும் கலாச்சாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷேய்க் அல்-ஹாபிழ் ஏ.எச். பர்ஸான் (நஹ்ஜி) நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதோடு>செஸ்டோ நிறுவனத்தின் தலைவர் நாபி எம் முஸ்னி நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
இந் நிகழ்வில் மக்பூலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம். ஜெமீல்> ஓய்வுபெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமது முஹைதீன்>பாண்டிருப்பு மினன் பள்ளிவாசல் தலைவர் பொறியியலாளர் எம்.எஸ். பஸீல்>மருதமுனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் எஸ். றியாஸ் (நளீமி)> செஸ்டோ நிறுவனத்தின் செயலாளர் ஹம்சா மெஹிடீன்> அதன் இளைஞர் விவகார பிரிவு இணைப்பாளர் எம்.ரி.எம். ஹாரூன்> சிறுவர் விவகார பிரிவு இணைப்பாளர் அஷ்ஷேய்க் ராபி எஸ். மப்ராஸ் (நளீமி)>மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் ஏ.ஆர். ஜரீர்>மக்பூலியா ஜூம்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷேய்க் எம்.ஏ.எம். இப்ராஜ் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment