இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளை நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டது .
குறித்த கூட்டம் காரைதீவு பிரதான நூலக மண்டபத்தில் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது .
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் புதிய கிளை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன்படி தலைவராக தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், செயலாளராக கதிர்காமத்தம்பி செல்வ பிரகாஷ், பொருளாளராக கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி, உப தலைவராக முன்னாள் தவிசாளர் யோ. கோபிகாந்த், உபசெயலாளராக தர்மகர்த்தா த. சிவகுமார் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள் .
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரி செய்வதற்கான கூட்டத்தை இன்றும் நாளையும் காரைதீவின் நான்கு வட்டாரங்களிலே நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
0 comments :
Post a Comment