மாணவர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் பொருட்டும், அது தொடர்பாக மாணவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் ஐ.ஆர்.ஒ ஸ்ரீலங்கா தொண்டுசார் அமைப்பானது புதிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்தது.
பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் இவ் செயலமர்வுகளின் மற்றுமோர் நிகழ்வு இன்று கல்முனை கமு/கமு/ அல்-மிஸ்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. ஐ.ஆர்.ஒ ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் நிர்வாகி ஏ.றொஸான் முஹம்மட் பங்கேற்புடன் இடம்பெற்ற இவ் நிகழ்வினை கல்முனை மிஸ்பா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் தலைமை தாங்கினார்.
கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு இடம்பெற்ற இவ் கருத்தரங்கு நிகழ்வின் பிரதம வளவாளராக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் அதிகாரியும், போதைவஸ்து தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரியுமான எ.எல்.எம்.ரவுப் கலந்து கொண்டார்கள். மேலும் இவ் நிகழ்வில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்.கே.றுமேந்திரனாந் அவர்களும், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment