திருகோணமலை,பாலம்போட்டாறு பத்தினிபுரம் பகுதியில் சோளம் அறுவடை நிகழ்வு நேற்றை தினம் (04.01.2023) இடம் பெற்றது.
"சௌபாக்கியா" உற்பத்திக் கிராமம் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற அறுவடை நிகழ்வில் குறித்த பிரதேச தோட்டத் தொழில் உற்பத்தியாளர்களை தரிசு நிலங்களாக மாற விடாமல் பயிர்ச் செய்கையின் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தை மேம்பகுத்தும் நோக்கில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு இந்த பணி இடம் பெற்றுள்ளதுடன் பாரிய விளைச்சல் கிடைக்கக் கூடிய வகையில் அறுவடை இடம் பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நிகாத்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment