இந்தியாவை விட இலங்கையில் தான் கலை ஆர்வம் அதிகம்! நடனக் கலைஞர் சிதம்பரம் சுரேஷ் கருத்து



வி.ரி. சகாதேவராஜா-
ந்தியாவில் கலை பிறந்து இருக்கலாம். ஆனால் இலங்கையில் தான் கலை ஆர்வம் மிகவும் கூடுதலாக இருக்கிறது .

இவ்வாறு ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பிரபல நடன கலைஞர் சிதம்பரம் ஆர் சுரேஷ் தெரிவித்தார்.

அவருடன் அவரின் மனைவி நடன நர்த்தகி ஷோபனா சுரேஷ் அவர்களும் நேற்று முன்தினம் (24) செவ்வாய்க்கிழமை மாலை வருகை தந்திருந்தார் .

காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நடனத்துறை காரைதீவு மாணவி ஜெயகோபன் தக்சாளினியின் அழைப்பை ஏற்று இக் கலைக்குடும்பத்தினர் வருகை தந்தனர்.
அங்கு அவர்கள் சுவாமி விபுலானந்தர் பிறந்த இல்லத்தையும் அரும்பொருள் காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

பின்னர் மணிமண்டபத்தில் விபுலானந்த நாட்டிய நிருத்திய மாணவிகளுக்கு பயிற்சிகள் இடம்பெற்றது.
அந்நிகழ்ச்சி மணிமண்டப முன்னாள் தலைவர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது .

அங்கு அவர் மேலும் பேசுகையில்..
சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லத்தை பார்க்க கிடைத்தை ஒரு பாக்கியமாக கருதுகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை விட இலங்கையில் உள்ள மாணவர்கள் கலையில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் பல கலைப் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள். நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவன். சிதம்பரம் நடராஜர் ஆலயம் சிறப்பானது. பரதநாட்டியத்தில் அரைமண்டி முழு மண்டி முக்கியமானது இதை இன்று உங்களுக்கு சொல்கின்றேன் என்றார். மாணவருக்கு பயிற்சி வழங்கிய சுரேஷ் தம்பதிகளுக்கு மணிமண்டப முன்னாள்தலைவர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் நடன ஆசிரியை திருமதி ஷர்மிளா சுதாகரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். பல்கலைக்கழக மாணவி ஜெயகோபன் தக்சாளினி அவர்களுக்கு கலைப்பரிசைக் கையளித்தார்.

வரலாறு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று தனக்கான ஒரு அங்கிகாரத்தை பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண் நடன கலைஞர்களுள் ஒருவர் சுரேஷ்.
அவுஸ்ரேலியா நாட்டில் சமர்பணா நாட்டிய பள்ளியை நடத்தி வருபவர்..
அவரும் அவரது மனைவியாரும் சிறந்த நாட்டிய கலைஞர் திருமதி. சோபனா சுரேஸ்..

அவர் நடனக்கலை உடன் சிலம்பு கலையிலும் சிறந்தவர்.

அண்மையில் நடனத்திற்கு முக்கியமானது தாளம்
. அதனை விளக்கி 108 பரதநாட்டிய ஜதிகள் எனும் நூலை தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டவர் ..
ஆன்லைன் இலும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை தன் வசம் கொண்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :