சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தின் வருடாந்த உயர்தரதின விடுகை விழா அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பாடசாலையின் இணைப்பாளரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
அங்கு வருடாந்த "நவீனம்" சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
பரீட்சைக்குத் தோற்றம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகள் பற்றி பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் விசேட உரையாற்றினார்.
விழாவில் உப அதிபர் என்.வன்னியசிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் உயர்தர மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின.விடுகையுறும் மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment