கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில்; சகோ.எஸ்.ஐ.ஏ.மத்தியு நினைவுப் பெருரையும், 'கிழக்கு இலங்கை நாட்டார் பாடல்களும் அவற்றின் பண்புகளும்'பௌர்ணமி நிலா கவியரங்கும் அண்மையில் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில் பாடசாலையின் உயர்தர மாணவர்களால் நடாத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கவிஞர் தம்பிப்பிள்ளை நடேஸ் கலந்து சிறப்பித்தார்.மேலும் பிரதி அதிபர்,உபஅதிபர் பகுதித்தவைர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கவிஞர் தம்பிப்பிள்ளை நடேஸ் அதிபரால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.இங்கு மாணவர்கள் கவியரங்கில் கவிதை பாடினார்கள்.
இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கவிஞர் தம்பிப்பிள்ளை நடேஸ் உரையாற்றுகையில் :-நேரத்தை மண்ணாக்காது பொன்னாக்கவோம் என்ற வாசகத்திற்கு அமைய இலைமறை காய்களாக இருக்கும் எங்களைப் போன்றவர்களையும்,திறமைகளோடு காத்துக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங் களையும் வெளி உலகிற்கு வெளிக் கொண்ட வரும் வகையில் இவ்வேற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பயிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
'காலத்திற்குப் பயிர் செய்வோம்' என்ற வாசகத்திற்கு அமைவாக உரிய நேரகாலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.இன்றைய நாள் இந்த நிமிடம் எல்லோருக்கும் ஒர மகிழ்சிகரமான நாளாக இருந்து கொண்டிருக்கின்றது.இன்றைய காலகட்டங் களிலும்,இன்றைய சூழலிலும் மாணர்களது எண்ணங்கள், சிந்தனைகள், நடத்தைகள்,செயற்பாடுகள் அனைத்தும சிசைமாறிப்போகாமல் இருப்பதற்கு இக்கலையரங்கமானது இன்றைய கால நேரத்திற்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
இக்கலையரங்கில் இடம் பெறுகின்ற அனைத்து கலைநிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் மேடையாகவே நான் உணர்கின்றேன். கவிஞர்களாக,கவிதா யினிகளாக,விமர்சகர்களாக,எழுத்தாளர்களாக.ஆய்வாளர்களாக,பேச்சாளர்களாக,அறிப்பாளர்களாக உலகை வலம் வருவதற்கு உந்துசக்தியாகவே இன்றைய கலையரங்கு அமைந்திரக்கின்றது.
ஆலவிரூட்ஷம் போல் கிளைபரப்பி உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டுமென்றால் இக்கலையரங்க நிகழ்வுகளை இடைவிடாது ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நடாத்தி அடுத்து வரும் மாணவச் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக மிளிர வேண்டும் என்பதை அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.இன்றைய கலையரங்கின் விஷேட கருப்பொருளாக நாட்டார் பாடல்களும் அவற்றின் பண்புகள் பற்றியதுமாகும்.ஆரம்பக் காலங்களில் கிழக்கின் பாடசாலைகளிலே மாணவ மன்றங்கள், சொற்பொழிவுகள், நாட்டக்கூத்து. நாட்டார் பாடல்கள்,பட்டிமன்றங்கள்,நாடகங்கள் என பல வகையான நிகழ்வுகள் இடம்பெற்று வந்ததை நாம் அறிவோம்.
ஆனால் தற்போதய நிலைமையில் இவை அனைத்தும் மருவி வருகின்ற இவ்வேளையில் இவை அழிந்து மறைந்து போகாதவாறு பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.இந்த நிலையில் நாங்கள் எல்லோரும் கைப்பேசியுடன் எமது நேரங்களை வீண் விரயம் செய்து கொண்டிருக் கின்றோம்.அன்பான மாணவர்களே பெற்றோர்களுக்கு கிழ்பணிந்து அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்தும்,ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நேரத்தை வீண்விரயம் செய்யாமல் உங்களது திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு நல்லதொரு வாய்ப்பினை எமது பாடசாலை ஏற்படுத்தித் தந்திருக் கின்றது.இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நன்றாகப் பயன் படுத்திக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment